ஜனாதிபதி பதவி ரப்பர் ஸ்டாம்பு போன்றது என்று சொல்வார்கள். ஆனால் பிரணாப் முகர்ஜி ரப்பர் ஸ்டாம்பாக இருக்க மாட்டார் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஏனெனில் மத்திய அரசின் பல்வேறு இலாகாக்களில் வகித்துள்ள அவருக்கு அரசின் செயல்பாடுகள் அனைத்தும் அத்துபடியாகும். எனவே புதிய விஷயங்களிலோ, நிர்வாக முடிவுகளிலோ அவரை ஏமாற்ற முடியாது என்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் ஜனாதிபதிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளன என்பதை பர்க்கலாம்.
ஜனாதிபதி பல அதிகாரிகளின் உதவியோடு நாட்டின் ஆட்சி முறையை நடத்துகிறார். முக்கியமாக மந்திரிகள் வழியாக அரசு நடைபெறுகிறது. பிரதமரின் ஆலோசனைப்படி மற்ற அமைச்சர்களை ஜனாதிபதியே நியமிக்கிறார்.
மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்தின் (சுப்ரீம் கோர்ட்டின்) நீதிபதிகளையும் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். மாநிலங்களின் தலைவர் களான கவர்னர்களும் அவராலேயே நியமிக்கப்படுகிறார்கள்.
நம் நாட்டின் பிரதிநிதிகளாக அயல்நாடுகளுக்கு தூதுவர்கள் செல்கிறார்கள். இந்த தூதுவர்களை குடியரசு தலைவர் நியமிக்கிறார். பிற நாடுகளிலிருந்து வரும் தூதுவர்களை வரவேற்பதும் அவரே. நமது நாட்டின் படைகளின் தலைவர் ஜனாதிபதியே.
நாட்டிற்கான சட்டங்களை செய்யும் பார்லிமெண்ட் எனப்படும் பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் உடையவரும் அவரே. சட்டசபைகள் தங்கள் வேலையை தொடங்கும் முன் சொற்பொழிவாற்றி, அவை பணியாற்ற வேண்டிய துறைகளை குறிப்பிடுவார்.
சட்டசபைகளை கலைக்கும் அதிகாரமும் அவருடையதே. பாராளுமன்றம் இயற்றும் மசோதாக்கள் அவருடைய சம்மதம் பெற்றால்தான் சட்டங்களாகும். மசோதாவிற்கு அவர் சம்மதமளிக்கலாம். மறுபடியும் ஆலோசனை செய்யும்படி மசோதாவை திருப்பி அனுப்பலாம். ஆதலால் அவர் விரும்பும் சட்டங்களை கொண்டு வரவும், விருப்பமில்லாத சட்டங்களை தடுக்கவும் அவருக்கு செல்வாக்கு உண்டு.
குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கவும், மாற்றவும், நிறுத்தவும் குடியரசு தலைவருக்கு அதிகாரம் உண்டு. முக்கியமான மரண தண்டனையை மாற்றி குற்றவாளிக்கு உயிர் பிச்சை அளிக்கலாம். சில குறிப்பிட்ட சமயங்களில் அவர் அவசர சட்டங்களை ஏற்படுத்தலாம்.
நாட்டில் கலகம், பிற நாடுகளுடன் போர், எதிர்பாராத நெருக்கடி ஆகிய சமயங்களிலேயே அவருக்கு இந்த அதிகாரம் உண்டு. இந்த அவசர சட்டங்களை பிறகு பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியின் அதிகாரங்கரளை கண்டு பிரமித்து விடாதீர்கள். எல்லா ஆணைகளும் அவர் பெயரிலேயே வெளிவரும். எல்லா கடமைகளையும் ஆற்றுபவரும் அவரே. ஆனால் அவர் அதிகாரம் எல்லையற்றதன்று. எல்லாவற்றையும் அவர் பெயரால் நடத்துவது என்பது மரபு.
அரசியல் கடிகாரத்தை தொடங்கி வைக்கும் பொறுப்பும் உரிமையும் அவருடையவை. சட்டசபைகளையும், அமைச் சரவையையும் ஊக்குவிப்பது அவருடைய கடமை. அவசியம் ஏற்பட்டால் எச்சரிக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. ஆனால், உண்மையில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தைவிட செல்வாக்கு தான் அதிகம்.

No comments:
Post a Comment