இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை தாக்குவது சிறைபிடிப்பது வலைகளை அறுத்து மீன்களை கொள்ளையடிப்பது போன்ற அத்துமீறிய செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு தலைவர்கள் பிரதமரை வற்புறுத்தி வருகின்றனர் என்றாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.
கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது. பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மறுநாளும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர்.
இந்த நிலையில் இன்று கச்சத்தீவு அருகே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 படகுகளிலும் இருந்த 28 மீனவர்கள் சிறை பிடித்து யாழ்ப்பாணம் கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களிடம் நடந்த விசாரணையில், இலங்கை சட்டப்படி சங்கு பிடிப்பது தடை செய்யப்படடு இருப்பதாகவும், தடையை மீறி சங்கு பிடித்ததால் கைது செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் அவர்களிடமிருந்த சங்குகளை பறிமுதல் செய்துவிட்டு அவர்களை அனைவரையும் விடுதலை செய்தனர்.
விடுவிக்கப்பட்ட 28 தமிழக மீனவர்களும் இன்று இரவு அல்லது நாளை காலை நாகப்பட்டினம் வந்து சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment