ஓட்டல் அறையில் நடந்த நிர்வாண பார்ட்டியில் இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு முத்தம் கொடுத்த பெண், அவரை ‘டோட்டல் வேஸ்ட்’ என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த மாதம் சின் சிட்டியில் நண்பர்களுடன் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டார். அப்போது, வேடிக்கை விளையாட்டாக நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆடைகளை களைந்துள்ளனர்.
இதில் நிர்வாணமாக இருக்கும் இளம்பெண்ணை கட்டிப்பிடித்தபடி, ஹாரி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரச குடும்பத்தினருக்கு, ஹாரியின் இது இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இளவரசர் ஹாரியின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடக் கூடாது என்று இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு, அரச குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதையும் மீறி ஹாரியின் புகைப்படங்கள், அவருடன் கலந்து கொண்டவர்கள் பற்றிய செய்திகள் வெளியாகி வருகிறது. அதில், ஹாரியுடன் நிர்வாணமாக இருந்த பெண்ணான கேரி ரெய்சர்ட்(32) என்ற பெண் அளித்துள்ள பேட்டி:
நான் பார்ட்டி நடந்த ஓட்டல் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த ஹாரியின் நண்பர்கள், எதேச்சையாக என்னை அழைத்து சென்றனர். பார்ட்டி நடந்த அறைக்கு சென்றபோது, அங்கு ஏற்கனவே ஹாரி உட்பட பலர் நிர்வாணமாக இருந்தனர். என்னுடன் சில நிமிடங்கள் பேசிய ஹாரி, பின்னர் பார்ட்டி அறையில் இருந்து என்னை அவரது படுக்கை அறைக்கு அழைத்து சென்றார்.
அங்கு நானும் என்னுடைய பிகினி உடையை களைந்து நிர்வாணமானேன். பின்னர் ஹாரிக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்தேன். இது சாதாரணமாக நடந்த சம்பவம். ஆனால், இளவரசர் ஹாரி டோட்டல் வேஸ்ட். அவர் ஒரு ஜென்டில்மேனாக இருந்ததால், முழுமையான வாய்ப்பை இழந்தார். இளவரசருக்கு முத்தம் கொடுத்தது, சிறப்பானதாக இருந்தது. இவ்வாறு கேரி ரெய்சர்ட் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment