ஈரான் அணு ஆயுதங்களை பெருக்குவதாகக் கூறி, அதன் அணு மின் திட்டங்களை கைவிடச்சொல்லி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் லெபனான் ஈரானியர்கள் ஆதரவுடன் செயல்பட்டு வரும் ஹிஸ்பொல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கூறியதாவது:-
ஈரான் நாட்டு அணுமின் திட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை தாக்குவோம். பதிலடி கொடுப்பது குறித்து முடிவு எடுத்து இருக்கிறோம். தாக்குதல் மிகக் கடுமையாக இருக்கும்.
இஸ்ரேல் ஈரான் மீது குறிவைத்தால், அமெரிக்க அதன் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். ஈரானின் அணுத் திட்டங்களை அணு ஆயுத திட்டமாக கூறிவரும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. என்னைப் பொறுத்தவரை இஸ்ரேல் ஒரு எதிரி நாடல்ல. ஆனால் சமீபகாலமாக ஈரானுக்கு எதிராக பேசிவருவது ஏற்றுக்கொள்ளமுடியாது.
இவ்வாறு ஹிஸ்பொல்லா தலைவர் கூறினார்.
ஹிஸ்புல்லாவுக்கு அழிவுகாலம் ஆரம்பம் ஆகிடுச்சின்னு அர்த்தம்
ReplyDelete