* மதுரையில் கிரானைட் மோசடியில் சிக்கி சிறையில் உள்ள கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமிகிரானைட் சாம்ராஜ்யத்தின் உள்ளே கண்ட காட்சிகள் தான் இவை.
* 400 ஏக்கர் பரப்பில் உள்ள இவரின் நிறுவன வளாகத்தில் 500 அடி அகலம், 2 ஆயிரம் அடி நீளம் கொண்ட 8 மெகா ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு ஷெட்டில் பிரமாண்டமான கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
* கண்காட்சி கூடத் தில் 60 வகையான கிரானைட் கற்களை பயன்படுத்தி, பூனை முதல் யானை வரை, எலி முதல் புலி வரை, மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் தனித்தனி கிரானைட் கற்களில் தத்ரூபமாக அமைத்துள்ளனர்.
* விலை உயர்ந்த கறுப்பு நிற கிரானைட் கற்களை, உலகிலேயே மிக நவீன இயந்திரங்களை கொண்டு செதுக்கி, பளபளப்பாக்கி பல்வேறு கலை பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* ஒரே கல்லினால் நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும் வடிவமைக்கப்பட்ட தாஜ்மகால், ஜல்லிக்கட்டு காளை வியப்பின் உச்சகட்டம்.
* பல நிற கிரானைட் கற்களால் வாஷ் பேசின்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* கிரானைட் கற்களால் அமைக்கப்பட்ட நீச்சல் குளம் பார்வையாளர்களை மலைக்க வைக்கும்.
* இந்த ஒரு கண்காட்சி கூடத்தின் மதிப்பு 300 கோடிக்குமேல் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
* வெளிநாட்டினர், பிரபல தொழிலதிபர்கள் பலரும் கண்காட்சி கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆர்டர்கள் பெறுவதை பிஆர்பி நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது.
No comments:
Post a Comment