பிரபல இந்தி நடிகை சுமா என்றே ரிஷிகா. இவர் தமிழில் அர்ஜுன் ஜோடியாக ‘துரை’ படத்தில் நடித்தார். 2008-ல் இப்படம் ரிலீசானது. தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘வனயுத்தம்’ படத்தில் நடித்து வருகிறார்.
சுமாவின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளது. மும்பை பட உலகில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சுமாவின் ஆபாச படங்களுடன் செல்போன் நம்பரையும் பதிவு செய்து விலைமாது போல் சித்தரித்து உள்ளனர்.
இதுபற்றி சுமாவுக்கு தகவல் வந்ததும் அதிர்ச்சியானார். இன்டர்நெட்டில் தன்னை இழிவுபடுத்தி படங்கள் வெளியிட்டுள்ளதாக மும்பை போலீசில் சுமா புகார் அளித்துள்ளார். மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண். என்னை தப்பானவள்போல் சித்தரித்து இன்டர்நெட்டில் படங்கள் வெளியிட்டு உள்ளனர். அதில் போன் நம்பரையும் குறித்துள்ளனர். இதனால் எனக்கு தவறான எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன.
எனது தாய் ஆசிரியை வேலை பார்க்கிறார். தந்தை சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நான் மாடலிங் செய்து நடிக்க வந்தேன். என்னை இழிவுபடுத்தி படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment