விஜய், காஜல்அகர்வால் ஜோடியாக நடித்த ‘துப்பாக்கி’ படம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. இப்படத்துக்கு தொடர்ந்து சர்ச்சைகள் வருகிறது. ‘துப்பாக்கி’ தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த படத்தின் விளம்பரத்துக்காக விஜய் புகை பிடிப்பது போன்ற ஒட்டப்பட்ட போஸ்டர்களையும் எதிர்த்தனர். இதுகுறித்து காஜல் அகர்வால் கூறியதாவது:-
துப்பாக்கிக்கு மட்டுமின்றி எல்லா படங்களுக்கும் தற்போது சிக்கல்கள் வருகின்றன. விஜய் புகை பிடிக்கும் போஸ்டருக்கு எதிர்ப்புகள் கிளப்பப்பட்டன. படத்தின் தலைப்புக்கும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இதையெல்லாம் மீறி ரசிகர்கள் படத்துக்கு ஆதரவு கொடுப்பார்கள்.
சில தமிழ் படங்கள் என்னால் தாமதமாவதாக செய்திகள் பரவி உள்ளன. திட்டமிட்டப்படி என் படங்களில் நடித்து முடித்து விட்டேன். நிறைய படங்கள் கைவசம் உள்ளன. எல்லாவற்றிலும் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். இந்திப் படங்களிலும் நடிக்கிறேன்.
டாப்சி, இலியானா போன்றோருக்கும் எனக்கும் இந்திப் படங்களில் நடிப்பதில் போட்டி நிலவுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. முத்தக்காட்சி, கவர்ச்சி போன்றவை கதையோடு சம்பந்தப்பட்டவை. கதைக்கு எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி நடிப்பேன். கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் இடையில் மெல்லிய கோடுதான் உள்ளது. நான் ஒரு போதும் அந்த எல்லையை மீறமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment