எரிபொருள் மானியத்துக்கு அளிக்க பணம் இல்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்ததையடுத்து பெட்ரோல், டீசல், கேஸ் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படுகிறது.
டீசல், கேஸ் மற்றும் பொது விநியோக முறையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் உற்பத்தி செலவு 28 சதவீதம் அதிகரி்ததுள்ளபோதிலும் அவற்றின் விலை கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து உயர்த்தப்படவில்லை. டீசல் மற்றும் சமையல் எரிபொருட்களை விற்கும் அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு தினமும் ரூ.560 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் குறுகிய கால கடன்கள் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
அவ்வாறு 3 அரசு எண்ணெய் நிறுவனங்கள் வாங்கிய கடன் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1,57,617 கோடியாக உயர்ந்துள்ளது. இதுவே கடந்த மார்ச் 31ம் தேதி ரூ. 1,28,272 கோடியாக இருந்தது.
மேலும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கையில் அந்நிறுவனங்களுக்கு ரூ.5 நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில் எரிபொருள் மானியத்துக்கு வழங்க நிதி இல்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவின் ஆபரணங்கள் போன்றவை. அதனால் என்ன விலை கொடுத்தாவது அவற்றை காப்பாற்ற வேண்டும். அரசுகள் வரும் போகும் ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் நாட்டுக்கு தேவை என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகு உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment