மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகை ஷீலா. ‘செம்மீன்’ படத்தில் நடித்ததின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டவர். டெல்லியில் நடந்த ஓணம் விழாவில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய விருப்பமாக இருக்கிறேன். இதற்காக அரசியல் கட்சியில் என்னை இணைத்து கொள்ளவும் தயாராகி விட்டேன். காங்கிரஸ் கட்சியின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே காங்கிரசில் சேர்ந்து சேவை புரிய விரும்புகிறேன். கட்சி வாய்ப்பளித்தால் கேரளா காங்கிரசில் இணைந்து அரசியல் பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment