சர்வதேச
கிரிக்கெட்
கவுன்சிலின்
ரேங்கிங்
பட்டியலில்
இந்திய
அணி
தொடர்ந்து
நம்பர்1
இடத்தில்
நீடிக்கிறது.
இலங்கைக்கு
எதிரான
தொடரில்
இந்திய
கேப்டனாக
செயல்பட்ட
விராட்
கோஹ்லி
2வது
இடத்துக்கு
முன்னேறி
உள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அணிகள் வரிசையில் இந்தியா தொடர்ந்து நம்பர்1 இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக தொடரில் தொடர்ந்து 3 போட்டிகளில் வென்றதன் மூலம் 2வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, இந்தியாவை நெருங்கி உள்ளது.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்திய அணியின் விராட் கோஹ்லி 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கேப்டன் டோனி 7வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் மட்டுமே டாப்10ல் இருக்கிறார். இவர், 641 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார்.
No comments:
Post a Comment