Thursday, November 20, 2014

80 வயது கொலைகார தாத்தாவை மணக்கப் போகும் 26 வயது இளம் பெண்!

அமெரிக்காவில் 26 வயதான பெண் ஒருவர் 80 வயதான கொலைக் குற்றவாளி ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் மேன்சன். இவர் கடந்த 1969 ஆம் ஆண்டுகளில் 7 பேரை கொடூரமாக கொலை செய்தார். இக்கொடூர கொலைகளுக்காக கைது செய்யப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் முழுவதும் சிறையில் கழிக்கும்படி தண்டனை வழங்கப்பட்டது. தற்போது இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் உள்ளார். அங்கு அவரை சூப்டன் எலைன்ஸ் பர்டான் என்ற 26 வயது இளம் பெண் அடிக்கடி பார்க்க வந்தார்.

இதில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மேன்சன் சிறை கைதி என்பதால் கல்போர்னியா மறுவாழ்வு சீர் திருத்த துறையில் அனுமதி பெற வேண்டும்.

அவர் தன்னை விட 54 வயது குறைந்த பர்டனை திருமணம் செய்ய அனுமதி கேட்டு கடந்த 7 ஆம் தேதி விண்ணப்பம் செய்தார். அதை ஏற்று திருமணம் செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்கின்றனர்.

மேன்சன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த திருமணம் குறித்து பார்டன் கூறும் போது, நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் எனவே திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் என்னுடன் வாழ் நாள் முழுவதும் இருப்பார் என்றும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment