பிறந்த
நாளில் ரஜினி சந்திப்பாரா என்று
அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ரஜினிக்கு வரும்
12ம் தேதி 65 வயது பிறக்கிறது.
ஒவ்வொரு பிறந்த நாளையும் அவரது
ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். இம்முறை தனது பிறந்த
நாள் பரிசாக லிங்கா படத்தை
ரிலீஸ் செய்வதாக ரஜினி தெரிவித்துள்ளார். இதில்
ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இரட்டை சந்தோஷத்தில் திளைத்தி ருக்கும் ரசிகர்கள் படத்தை பார்க்கும் ஆவலுடன்
இருக்கும் அதே நேரத்தில், ரஜினியை
நேரில் சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவும் எண்ணி உள்ளனர்.
இதையடுத்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள
மன்ற தலைவர்களிடம் இதுபற்றி ரசிகர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் உள்ள ரஜினியின் வீட்டுக்கு
நேரில் செல்வதுபற்றியும் ஆலோசித்து வருகிறார்கள்.
அத்துடன்
தங்கள் பகுதிகளில் இலவச நோட்டு, புத்தகம்,
அன்னதானம் போன்ற நற்பணிகளுக்கும் ஏற்பாடு
செய்து வருகின்றனர். இதற்கிடையில் ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு
செய்திருந்த நற்பணி நிகழ்ச்சிகளில் ரஜினியின்
அண்ணன் சத்திய நாராயணராவ் கலந்துகொண்டு
வருகிறார். நேற்றுமுன் தினம் திருச்சிக்கு வந்தார்.
‘ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்று அவரிடம் கேட்டதற்கு,‘ரஜினிக்கு அரசியல் வேண்டாம். அது
அவருக்கு சரிப்பட்டு வராது. ரஜினியை தங்கள்
இயக்கத்துக்கு வரச் சொல்லி அழைக்கிறார்கள்.
ஒரு கட்சியில் சேர்ந்து விட்டால் மற்றவர்களை திட்ட வேண்டி வரும்.
அதுபோல் வேண்டாம் என குறிப்பிட்டார். Ôலிங்காÕ
ரிலீசுக்கு பிறகு ரசிகர்களை ரஜினி
சந்திப்பார் என்றும் அவர் கூறினார்.
இதனால் பிறந்த நாளில் ரஜினியை
சந்திக்க அவரது ரசிகர்கள் தயாராகி
வருகின்றனர்.
No comments:
Post a Comment