இந்திய
நாட்டின் குடிமகன் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் அவருக்கு
பாஸ்போர்ட் தேவை. இந்த பாஸ்போர்ட்
முன்பு கையால் எழுதப்பட்டிருந்தது. தற்போது
நவீன காலத்தில் அவை கம்ப்யூட்டர் மயமாக
மாறியுள்ளது. ஏற்கனவே உள்ள கையால்
எழுதப்பட்ட பாஸ்போர்ட் அடுத்த ஆண்டு நவம்வர்
24-ந்தேதி முதல் செல்லாது என்று
மத்திய அரசு பாராளுமன்றத்தில் இன்று
தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில்
தி.மு.க. உறுப்பினர்
கனிமொழி கேட்ட கேள்விக்கு வெளியுறத்துறை
இணை அமைச்சர் வி.கே. சிங்
எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது
அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம்
24-ந்தேதிக்குப் பின் செல்லாது என்று
சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பு
தெரிவித்துள்ளது. நவம்பர் 25-ந்தேதி முதல் வெளிநாடுகள்,
இதுபோன்ற பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களை தடுத்து நிறுத்தலாம்.
கடந்த
2001-ம் ஆண்டுக்குப் பிறகு நவீன தொழில்நுட்பத்துடன்
கூடிய பாஸ்போர்ட் (மெஷின் ரீடபிள் பாஸ்போர்ட்)
வழங்கப்பட்டு வருகிறது. 1990-ம் ஆண்டுகளில் கையால்
எழுதப்பட்ட பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இதன் 20 வருட செல்லுபடியாகும்
காலம் முடிந்துவிட்டது. இந்தியாவில் வசிக்கும் இந்திய குடிமகன்கள் தங்கள்
20 வருடத்திற்கு முன்பு உள்ள பழைய
பாஸ்போர்ட்டுகளை நவம்பர் 24-ந்தேதிக்குள் மாற்றி வெளிநாடுகளுக்கு சிரமமின்றி
செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு
அவர் கூறினார்.

No comments:
Post a Comment