நடிகை மீரா ஜாஸ்மின் திருமணத்தை
பதிவு செய்ய முடியாது என்று
திருவனந்தபுரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மீரா ஜாஸ்மினுக்கும் திருவனந்தபுரத்தைச்
சேர்ந்த அனில் ஜான் டைட்டஸ்
என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 12-ம்
தேதி திருமணம் நடந்தது.
சில மாதங்கள் கழித்து திருவனந்தபுரம் மாநகராட்சியில்
திருமணப் பதிவுக்கான விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. இதை தற்போது மாநகராட்சி
நிராகரித்துள்ளது. இதுபற்றி
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது,
‘மீரா ஜாஸ்மின் திருமணத்தை பதிவு செய்ய ஆகஸ்ட்
மாதம் விண்ணப்பிக்கப்பட்டது.
அதில் திருமணப் பதிவுக்குத் தேவையான முறையான ஆவணங்கள்
தாக்கல் செய்யப்படவில்லை. அனில் ஜான் டைட்டஸ்க்கு
இது முதல் திருமணமா? இரண்டாவது
திருமணமா என்று குறிப்பிடப்படவில்லை. திருமணத்தின் போது,
தனது முதல் மனைவியிடம் இருந்து
மிரட்டல் இருப்பதாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும்
அவர் கோரியிருந்தார்.
இதனால்
பலத்த பாதுகாப்புடன் திருமணம் நடந்தது. ஆனால் விண்ணப்பத்தில் ஏற்கனவே
திருமணம் நடந்தது பற்றி குறிப்பிடவில்லை.
அதனால் நிராகரித்துவிட்டோம்‘ என்றார். மீரா ஜாஸ்மின் துபாயில்
இருப்பதால் அவர் கவனத்துக்கு இது
செல்லவில்லை என்று தெரிகிறது.
No comments:
Post a Comment