இன்று பிறந்த நாள் காணும் தனது நெருங்கிய நண்பர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக் கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன்.
லிங்காவின் மாபெரும் வெற்றிக்கும் வாழ்த்துக் கூறியுள்ளார்.
ரஜினி – கமல் நட்புக்கு புதிய அறிமுகம் தேவையில்லை. கமல் – ரஜினியாக இருந்த போதும் சரி, ரஜினி – கமலாக மாறிய பிறகும் சரி, அவர்களின் நட்பு அற்புதமாகக் தொடர்கிறது
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள கமல் ஹாஸன் ரஜினிக்கு அனுப்பியுள்ள பிறந்த நாள் வாழ்த்து வீடியோவில் கூறியிருப்பதாவது:
கமல்ஹாசன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து சமூக வலைதளம் மூலமாக பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கமல் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
ஹாய் ரஜினி! இனிய 44வது பிறந்த நாள் வாழ்த்துகள்.. லிங்காவின் அபார வெற்றிக்கும் எனது வாழ்த்துகள்.. என்ன இப்படி வாழ்த்து சொல்றீங்கன்னு பார்க்கிறீங்களா..நான் ஊரில் இல்லை.. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கிறேன்.. போன மாசம் நீங்க எனக்குப் போன் பண்ணி 42வது வயசுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்னு சொன்னீங்க..
இது பதில் இல்லை.. நம்முடைய நட்பின் வயசு இதுவா இருக்கும்னு நினைக்கிறேன்.. ஊருக்கு வந்தோ அல்லது இங்கேயோ படம் பார்த்துவிடுகிறேன்.. நலமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்து வீடியோ:

No comments:
Post a Comment