சிம்புதேவன்
இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி
ஹாசன் , ஸ்ரீதேவி, சுதீப் நடிக்கும் படம்
‘விஜய்58’. சமீபத்தில் இந்த படத்தின் பிரம்மாண்ட
பாடல் காட்சி ஒன்றில் விஜய்
மற்றும் ஹன்சிகா அரசர் கால
கெட்டப்பில் நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.
இப்போது
இரண்டாம் கட்ட படப்பிடிப்பாக ஹன்சிகாவிற்கு
படத்தில் வாள் சண்டைக்காட்சி உள்ளது.
இதற்காக ஹாங்காங் நாட்டை சேர்ந்த சண்டைப்
பயிற்சியாளர் வரவழைக்கப்பட்டு, சிறப்பு
பயிற்சிகள் அளிக்கப்பட்டதாம்.
இதுகுறித்து
ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில்
: '' இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்,
வாள் சண்டை பயிற்சி ஆர்வமாக
இருக்கிறது. ஆனாலும், பயமாக இருக்கிறது. இளவரசி
எப்போது சண்டைக்கும் தயாராகத்தானே இருக்கவேண்டும் ''என ட்வீட் செய்துள்ளார்.
இதே போல் சுதீப் தனது
ட்விட்டர் பக்கத்தில் ''விஜய் மற்றும் படக்குழுவுடன்
வேலை செய்வது சிறந்த அனுபவம். எனது
கதாபாத்திரத்தை முழுமையாக அனுபவித்து நடித்தேன்.'' என ட்வீட் செய்தார்.
No comments:
Post a Comment