தமிழக பொது சுகாதாரம் மற்றும்
நோய் தடுப்புத்துறை முன்னாள்  இயக்குனர்
டாக்டர் இளங்கோ கூறியதாவது: 
பறவை
காய்ச்சல் வைரஸ்  நோய்
தாக்கிய கோழி இறைச்சியை சாப்பிடுகிறவர்களுக்கும்
பறவை  காய்ச்சல்
வைரஸ் தாக்க வாய்ப்புள்ளது. பறவை
காய்ச்சல் வைரஸ்  தாக்கிய
கோழியை சமைப்பதற்கு முன், அந்த கோழியை
நாம் கையால்  தொடுகிறோம்,
அதை தண்ணீரில் சுத்தம் செய்கிறோம். நோய்  பாதிக்கப்பட்ட
கோழியை தொட்டால் கூட கிருமி தாக்கவும்,
100 % நோய்  பரவும்
ஆபத்தும் உள்ளது. 
பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களை தாக்கினால்,
வயிற்றுப்போக்கு  ஏற்படும்.
அதையடுத்து, சுவாச தொற்று ஏற்பட்டு
நுரையீரல் பாதிப்பு மூச்சு  திணறல்
ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படும்
ஆபத்துள்ளது. கோழியின்  முட்டை
ஓட்டில் கூட பறவை காய்ச்சல்
வைரஸ் இருக்கும். அதை நாம்  தொடும்போது நமக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படும்.
ஆனால், முட்டைக்கு  உள்ளே
இருப்பதை சாப்பிட்டால் நோய் பாதிப்பு இருக்காது.
ஒருவருக்கு  வைரஸ்
தாக்கினால் அவர், 15 நாள் மட்டுமே உயிரோடு
இருப்பார்.
பண்ணை கோழிகள் மூலம், வீட்டில்
வளர்க்கும் கோழிகளுக்கும் பரவ  வாய்ப்புள்ளது.
கோழிகள் எதுவும் சாப்பிடாமல், மூக்கு
பகுதியில் ஒருவித  மாற்றம்,
சத்தம் போட்டுக் கொண்டே இருப்பது, திடீரென
சுருண்டு விழுந்து  இறப்பது
போன்ற அறிகுறி இருந்தால், 
பறவை
காய்ச்சல் வைரஸ்  இருப்பதாக
அர்த்தம். கேரள மாநில எல்லை
பகுதியில் உள்ள கோவை,  நீலகிரி எல்லையில் வசிக்கும்
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.  கோழி கழிவுகளில் இருந்தும்,
காற்று மூலமும் இந்நோய் பரவ
அதிக  வாய்ப்புள்ளதால்,
கேரள பகுதிகளில் இருந்து கோழி கழிவுகளை
தமிழகம்  பகுதியில்
வந்து கொட்டாமல் இருக்க அப்பகுதி மக்கள்
தீவிர  கண்காணிப்பில்
இருக்க வேண்டும். இவ்வாறு டாக்டர் இளங்கோ
கூறினார்.
 
 
No comments:
Post a Comment