கேரளா மாநிலம் கோழிகோட்டில் முத்த
போராட்டத்திற்காக திரண்டவர்களுக்கும், எதிர்பாளருக்கும் மோதல் வெடித்ததால் பதற்றம்
ஏற்பட்டது. பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய
ஜனதா இவமோக்ஷா அமைப்பின் நன்னரிகொள்கைகளை கண்டித்து
கடந்த மாதம் கொச்சியில் முத்த
போராட்டம் நடைபெற்றது.
அதில் ஏராளமான ஆண்களும் பெண்களும்
கலந்து கொண்டனர். நாடு முழுவதும் பரபரப்பு
ஏற்படுத்திய இந்த போராட்டம், கேரளாவில்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோழிகோடு பேருந்து நிலையம் அருகே முழக்கங்களை
எழுப்பிய படி ஊர்வலமாக வந்து
குவிந்த ஆண்களும் பெண்களும் தடையை மீறி போரட்டத்தில்
ஈடுபட முயன்றனர். போராட்டத்திற்கு ஏற்பு தெரிவித்து அனுமன்
சென அமைப்பினரும் அங்கு திரண்டனர்.
அப்போது
போரட்டகாரர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவரை
ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்களை
போலீஸார் தடியடி
நடத்தி கலைத்தனர். மேலும் போராட்டகாரர்கள், எதிர்பாளர்கள்
என 50க்கும் மேற்பட்டோரை கைது
செய்தனர். போராட்டம் காரணமாக கோழிகோடு பேருந்து
நிலையம் அருகே சிறிது நேரம்
பதற்றம் நிலவியது.

No comments:
Post a Comment