ஜனவரி முதல் டாஸ்மாக் மதுபானங்கள்
விலையை உயர்த்த அரசு முடிவு
செய்துள்ளதாகவும், இதன் காரணமாக ரூ.100க்கு குறைந்து குவார்ட்டர்
கிடைக்காது என்றும்
டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 2003 நவம்பர் மாதம் மதுபான
விற்பனையை அப்போதைய அதிமுக அரசு டாஸ்
மாக் நிறுவனம் மூலம் துவங்கியது.
டாஸ்மாக் மது விற்பனை மூலம்
அப்போது ரூ.1500 கோடி வருமானம்
கிடைத்த நிலையில், 2013-14ம் நிதியாண்டில் இது
ரூ.24 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.
அரசின் இலவச திட்டங்கள்
அனைத்தும் டாஸ்மாக் வருமானத்தை நம்பியே செயல்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,
மதுபானங்கள் விலையை
அரசு கடந்த அக்டோபர், நவம்பர்
மாதங்களில் உயர்த்தியது.
தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய
அரசு தரும் நிதி போதுமானதாக
இல்லாததால் இனி 3 மாதங்களுக்கு
ஒரு முறை மதுபானங்களின் விலையை
அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது
ரூ. 88 முதல் விற்கப்படும்
குவார்ட்டர் வகை மதுபானங்கள் ஜனவரி
1 முதல் ரூ.10 உயர்த்தப்படுகிறது. இதனால்
ரூ.98 வரை உயர்த்தப்படும்
மதுபானங்களுக்கு சில்லரை பிரச்னைக்காக ரூ.100
ஆக அதிகரிக்கலாம் என்று டாஸ்மாக் வட்டாரங்கள்
தெரிவித்தன.
இதுபோல் ரூ.180 முதல்
250 வரை விற்கப்படும் ‘ஹாப்‘
வகை மதுபானங்கள் ரூ.200 முதல் 270 வரையும்,
ரூ.320 முதல் ரூ.400 வரை
விற்கப்படும் ‘புல்’ வகை மதுபானங்கள்
ரூ.360 முதல் 440 வரை உயர்த்தப்படலாம்
என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அக்டோபர், நவம்பர்
மாதங் களில் டாஸ்மாக் மதுபானங்கள்
விலை தொடர்ந்து 2 முறை அதிகரித்த நிலை
யில், புத்தாண்டு முதல் மீண்டும்
மதுபானங்கள் விலை அதிகரிக்கும் என்ற
தகவலால் ‘குடி’மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையில், காலமுறை ஊதியம், 8 மணி
நேர வேலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ‘மதுபான
விலையை எவ்வளவு உயர்த்தினாலும் எங்களது
ஊதியத்தில் எந்த உயர்வும்
இல்லை’ என அவர்கள் புலம்புகின்றனர்.
* 2003ம்
ஆண்டு ரூ.1500 கோடி வருமானம்.
* 2014ல்
ரூ.24 ஆயிரம் கோடியாக உயர்வு.
* 6 மாதத்துக்குள்
3வது முறையாக விலை உயர்வு.
* 3 மாதத்துக்கு
ஒருமுறை விலை உயரும்
பேருந்து கட்டணம் 50 காசு ஏற்றினால் பேருந்துக்கு கல்வீசி போராட்டம், அரிசி விலை ஏறினா போராட்டம், பால்விலை ஏறினா போராட்டம், மின்கட்டணம் ஏற்றினா போராட்டம்னு போராடும் இந்திய மக்களுக்கிடையில் எவ்வளவு தான் ஏற்றினாலும் விலை ஏற்றத்துக்கு எல்லாம் அஞ்சாமல் டீசண்டா (ஹிஹிஹிஹி) வரிசையில் நின்று வாங்கிட்டு போகும் குடிமகன்களை என்னவென்று சொல்வது ....

No comments:
Post a Comment