இந்த வருட ஆஸ்கர் போட்டியில்
சிறந்த விஷுவல் எபெக்டுக்கான விருது
எந்தப் படத்துக்கு கிடைக்கும்? எந்த வருடத்தையும்விட இந்த
வருடம் கடும் போட்டி. 10 படங்கள்
நான் நீ என்று போட்டியில்
மிரட்டுகின்றன.
கேப்டன்
அமெரிக்கா - த வின்டர் சோல்ட்ஜ்யர்,
கார்டியன்ஸ் ஆஃப் த கேலக்ஸி,
எக்ஸ் மென் - டேய்ஸ் ஆஃப்
பியூச்சர் பாஸ்ட், ஸ்பைடர் - மேன்
2, ட்ரான்ஸ்பார்மர்ஸ் - ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்ஷன்,
காட்ஸில்லா, மேல்ஃபிஷன்ட், நைட் அட் த
மியூஸியம் - சீக்ரெட் ஆஃப் டோம்ப்.
இந்த எட்டு படங்களுடன் பீட்டர்
ஜாக்சனின் த ஹாபிட் - த
பேட்டில் ஆஃப் த பைவ்
ஆர்மீஸ் மற்றும் கிறிஸ்டோபர் நோலனின்
இன்டர்ஸ்டெல்லரும் மோதுகின்றன.
இன்றைய
கணிப்புப்படி நோலனின் படத்துக்கே விருது
கிடைப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.
கடைசி நேரத்தில் பீட்டர் ஜாக்சனும் முந்தலாம்.
விருது அறிவிக்கும்வரை நகத்தை கடிக்கும் அளவுக்கு
த்ரில்லிங்கான போட்டி.

No comments:
Post a Comment