சூரியப் புயல்
பூமியை தாக்கும் அபாயம் உள்ளதாக விண்வெளிக் குழு கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின்
இயற்பியல் துறை பேராசிரியர் டேனியல் பாக்கர் தலைமையிலான, கொலராடோ - பால்டர் பல்கலைக்கழக
விண்வெளிக் குழு கூறும் போது, ’சூரியன் எந்த நேரமும் காந்தப் பண்புகள் அடங்கிய மாபெரும்
வாயு வெடிப்பை உமிழ்ந்து கொண்டே இருக்கிறது.
இத்துடன் சூரிய
மண்டலத்தில் ஏற்படும் பெரு வெடிப்பு நிகழ்வான, தீவிர உயர் ஆற்றல் கதிர்வீச்சு வெடிப்பும்
சேர்ந்து கொள்ளும் போது அது சூரியப் புயல் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில்
சூரியப் புயலின் போது அதிதீவிர
வெப்ப ஆற்றலானது சூரியனின் மேற்பரப்பிலிருந்து விண்வெளியை நோக்கி எறியப்படுகிறது. மேலும்
சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் கரும்புள்ளிகளே வாயு வெடிப்புக்கு வழிவகுக்கின்றன.
தற்போது
சூரியப் புயல் பூமியின் காந்தப்
புலப் பாதையைத் தாக்கினால், விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் இதன் மூலம்
அமெரிக்காவில் மட்டும் 60ஆயிரம் கோடி டாலர்
முதல் 2லட்சத்து 60ஆயிரம் கோடி டாலர்
வரை சேதம் ஏற்படும்’ எனவும்
தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே
கடந்த அக்டோபர் 24ஆம் தேதி சூரியனில்
ஒரு மாபெரும் கரும்புள்ளி தோன்றியதாகும், ஏ.ஆர் 12192 என்ற
பெயரிடப்பட்ட அந்தக் கரும்புள்ளியானது பூமியின்
விட்டத்தைவிட 10 மடங்கு பெரியது எனவும்
ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக
அமெரிக்காவில் நாசா விண்வெளிக் கழகம்
கடந்த அக்டோடர் மாதம், இந்த சூரியப்
புயலால் 6 நாட்கள் இருளில் மூழ்கும்
அபாயம் இருப்பதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




No comments:
Post a Comment