கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்,
அனுஷ்கா, த்ரிஷா அருண் விஜய்
நடிப்பில் பொங்கல் சிறப்பாக வெளியாக
உள்ள படம் 'என்னை அறிந்தால்’.
இப்படத்தின்
டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. படத்தின் டீஸரைப் பார்த்த ரசிகர்கள்
மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும்
டீஸரை தங்களது சமூக வலை
பக்கங்களில் ஷேர் செய்து தங்களது
கருத்துகளை வெளியிட்டனர்.
இந்நிலையில்
24 மணி நேரங்களில் ‘ஐ’ படத்தின் டீஸர்
14 லட்சத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. ‘என்னை
அறிந்தால்’ படத்தின் டீஸரை கணக்கிடுகையில் சற்றுதான்
குறைவு.
எனினும்
இதுவரை அதிக லைக்குகள் பெற்ற
தமிழ் பட டீஸராக ‘ஐ’
படத்தின் டீஸர் 41 ஆயிரம் லைக்குகளைக் கடந்திருந்தது.
தற்போது
இந்த சாதனையை முறியடித்துள்ளது அஜித்தின்
‘என்னை அறிந்தால்’ . இதுவரை அதிகம் ரசித்த
‘கோச்சடையான்’, ‘கத்தி’, ‘லிங்கா’ டிரெய்லர்களுடன் ஒப்பிடுகையில்
‘என்னை அறிந்தால்’ இரண்டு
மடங்கு லைக்குகளைப் அதிகமாக பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அதிலும்
இரண்டு நாட்களில் 44 ஆயிரம் லைக்குகளை தொட்ட
முதல் தென்னிந்திய படமாகவும் பதிவாகியுள்ளது ‘என்னை அறிந்தால்’ படத்தின்
டீஸர்.

No comments:
Post a Comment