மாபெரும் நிதி மோசடி செய்த சஹாரா நிறுவனத் தலைவருடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளதால் அவரைக் கைது செய்யலாமா? என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்க மாநில போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ரா நேற்று சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
அப்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் கட்சி தொண்டர்களிடம் மத்திய அரசு குறித்து ஆவேசமாக பேசினார்.
அப்போது பேசிய அவர், "சாரதா சிட்பண்ட் ஊழலில் என்னை தொடர்புபடுத்தி பேசும் பிரதமர் மோடி, சஹாரா நிறுவன தலைவருடன் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளாரே. அப்படியானால் அவரை கைது செய்யலாமா? " என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதாயுடன் பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படம் நிரூபிக்கப்பட்டால், மோடியை கைது செய்ய வேண்டும் என்று மம்தா வலியுறுத்தினார்.
மதன் மித்ரா கைது செய்யப்பட்டதையடுத்து அந்த துறையை அவர் வரும் வரை நானே பார்த்துக்கொள்வேன் என்றும் மம்தா தெரிவித்தார்.
மதன் மித்ரா கைது செய்யப்பட்டுள்ளது மம்தா தலைமையிலான மேற்குவங்க அரசுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
சாரதா சிட் பண்ட் ஊழல் குறித்து மம்தாவிடமும் விசாரிக்க வேண்டும் என்று இடது சாரிகளும், பாஜகவினரும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment