துபாயில் கடலுக்கு அடியில் எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம்
சோனி நிறுவனம், எக்ஸ்பீரியா அகுவாடெக் ஷோரூமை துபாயில் கடலுக்கு அடியில் திறந்து, வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட் போன், டேப்லட் உள்ளிட்ட சாதனங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. துபாய் கடல் பகுதியில் குறிப்பிட்ட தூரத்தில் கடலுக்கு அடியில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு படகுகள் மூலம் வாடிக்கையாளர்கள் அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு பிரத்யேக நீச்சல் உடை அணிவித்து பயிற்சி பெற்றவர்களின் வழிகாட்டுதலில் கடலுக்கு அடியில் உள்ள ஷோரூமிற்கு செல்வார்கள். இந்த ஷோரூமில் வாடிக்கையாளர்கள இயல்பாக மூச்சு விடவும், கடல்தரையில் எளிதாக நின்று பொருட்களை காணவும், வாங்குவதற்கான வசதியும் உள்ளது. இந்த முயற்சி வர்த்தக உலகில் புரட்சி ஏற்படுத்தும் என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment