Monday, December 15, 2014

இளம்பெண்ணுக்கு முத்தம் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சரும், நடிகருமான அம்பரீஷ், இளம்பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கர்நாடக வீட்டுவசதித் துறை அமைச்சராக இருப்பவர் நடிகர் அம்பரீஷ். இவர் இளம்பெண் ஒருவருக்கு முத்தம் கொடுப்பது போன்ற போட்டோக்கள் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பெண், அமைச்சர் அம்பரீஷின் நண்பர் மகள் என தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து அம்பரீஷ் கூறுகையில், ''சினிமாவில் நான் பல பெண்களுடன் நடனமாடி இருக்கிறேன். அதேபோல் கட்டிப்பிடித்திருக்கிறேன். அதுபோலத்தான் இதுவும். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க நான் விரும்பவில்லை. இது குறித்து ராகுல் காந்தியுடம் புகார் போனால்கூட எனக்கு கவலை இல்லை'' என்றார்.

இதுகுறித்து அந்த இளம்பெண் கூறுகையில், ''ஒரு தந்தை, மகள் என்ற முறையில்தான் அந்த முத்தம் தரப்பட்டது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக சிலர் இந்த விவகாரத்தை சர்ச்சைக்குள்ளாக்குகின்றனர். இதனால் என் மனம் புண்பட்டு போய் இருக்கிறது'' என்றார்.

நடிகர் அம்பரீஷ், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment