உத்தர பிரதேசத்தில் மாணவர்களுக்கு செல்போனில் ஆபாச படம் காண்பித்த துவக்கப் பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கிருஷ்ணாநகரில் உள்ளது டக்சிலா பள்ளி. அந்த பள்ளியில் வேலை பார்த்து வந்து ஒரு ஆசிரியர் மற்றும் ஆசிரியை ஆகியோர் பள்ளியில் ஒரு அறையில் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த 2 மாணவிகள் அதை பார்த்துவிட்டு ஓட்டம்பிடித்தனர். மேலும் பிறரிடம் இது குறித்து தெரிவித்தனர். இந்த விஷயம் பெற்றோருக்கும் தெரிய வந்துள்ளது. ஆபாச படம் பார்த்த செல்போன் ஆசிரியையுடையது. இதற்கிடையே மாணவர்கள் அவர்களை அறையில் வைத்து பூட்டினர்.
அப்படி இருந்தும் ஆசிரியை தப்பியோடிவிட்டார். அந்த ஆசிரியரும், ஆசிரியையும் தங்களுக்கு ஆபாச படம் காட்டியதாக 4ம் வகுப்பு மாணவிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களின் பெற்றோர் கிருஷ்ணா நகர் போலீசில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியரை கைது செய்தனர். அந்த ஆசிரியையை தலைமை ஆசிரியை ஊர்மிளா ஷர்மா முன்னிலையில் போலீசார் விசாரித்தனர்.
ஆனால் அதற்குள் அந்த ஆசிரியை தனது போனில் இருந்த ஆபாச படங்களை அழித்துவிட்டார். பள்ளியில் ஆசிரியர் மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment