கோடி கோடியாக சம்பாதித்தாலும் சில நடிகர், நடிகைகளின் வாழ்வில் சோகம் இழையோடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சில்க் ஸ்மிதா, மோனல் போன்ற நடிகைகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர். சில சமயம் இது அவர்களின் குடும்ப உறவையும் பாதிக்கிறது. ‘மெட்ராஸ்' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்திருப்பவர் கேத்ரின் தெரசா. தற்போது ‘கணிதன்' படத்தில் அதர்வா ஜோடியாக நடிப்பதுடன் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவரது சகோதரர் கிறிஸ்டோபர். பெங்களூரில் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வந்தார்.
கிறிஸ்டோபருக்கும் குடும்பத்தினருக்கும் சுமுகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை தனது அறையில் ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அவரது அறையில் தங்கி இருக்கும் நண்பர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
படிப்பதற்கு போதுமான பணம் இல்லாததால் மனஉளைச்சலில் இருந்த கிறிஸ்டோபர் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். கேத்ரின் தெரசாவோ, அவரது குடும்பத்தினரோ அவருக்கு பணம் கொடுத்து உதவுவதில்லை என்றும் போலீசார் கூறி உள்ளனர். வெளியூரில் இருந்த கேத்ரின் நேற்று பெங்களூர் வந்து சகோதரரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டார்.

No comments:
Post a Comment