கிராமம்
என்றாலே நகரத்தை விட 10 ஆண்டுகள்
பின்தங்கியிருக்கும் என்ற நிலையை மாற்றி,
கிராமம் முழுவதும் இலவச ‘வை-பை‘
கனெக்ஷன், ஊராட்சி நிர்வாகத்தை வெளிப்படையாக
செயல்படுத்த இணையதளம் என அரியானாவில் உள்ள
பிபிபூர், முன்மாதிரி கிராமமாக உருவெடுத்து வருகிறது.
அரியானா மாநிலம் ஜிந்த்
மாவட்டத்தில் உள்ளது பிபிபூர் கிராம
ஊராட்சி. இங்கு, 5,000 மக்கள் வசிக்கின்றனர். இவர்களின்
முக்கிய தொழில் விவசாயம். ஆனாலும்
இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் போலீஸ், ராணுவம், தகவல்
தொழில்நுட்பம், நிர்வாகம், கல்வி துறைகளில் உயர்ந்த
பதவிகளில் பணியாற்றியும் வருகின்றனர்.
படித்த மக்கள் அதிகம்
என்பதால், கிராமமே ஹைடெக்காக மாறி
வருகிறது. இது குறித்து கிராம
தலைவரான முதுநிலை பட்டதாரி சுனில் ஜக்லன் கூறுகையில்,
‘ஊராட்சி நிர்வாகத்தை வெளிப்படையாகவும், விரைவாகவும் செயலாற்றுவதற்காக தனி இணையதளத்தை தொடங்க
உள்ளோம்.
அதே போல, இங்கு இன்டர்நெட்
பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால், கிராமம் முழுவதும் இலவச
வை-பை கனெக்ஷனை கொண்டு
வரவும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தற்போது
ஊராட்சி அலுவலகத்தில் மட்டும் இலவச வை-பை கனெக்ஷன் உள்ளது‘
என்றார்.
ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு
வரும் வளர்ச்சி திட்ட பணிகள், எதிர்கால
திட்டங்களின் நிலை குறித்து இந்த
கிராம மக்கள் பலரும் ஆர்டிஐ
சட்டத்தின் கீழ் மனு தாக்கல்
செய்து வருகின்றனர். ஊராட்சிக்கென தனி இணையதளம் தொடங்கப்படும்
பட்சத்தில், ஆர்டிஐ மனுவுக்கு 2 நாளில்
தகவல் அளித்து விட முடியும்
என்றும் ஜக்லன் தெரிவித்துள்ளார்.
மேலும்
அவர், ‘2015ம் ஆண்டிலிருந்து நாட்டில்
உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தனி
இணையதளத்தை தொடங்க மத்திய அரசு
நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது‘ என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.
பிபிபூர் வாட்ஸ்-அப் கணக்கில்
50 குழுக்களும், பேஸ்புக் பக்கத்தில் 2,500 பேர் இணைந்திருப்பதாகவும் ஜக்லன்
கூறி உள்ளார்.

No comments:
Post a Comment