சென்னையில்
பஸ் நிறுத்தம் அருகே சொகுசு காரில்
விபசாரத்தில் ஈடுபட்ட இளம் பெண்கள்
மீட்கப்பட்டனர்.
சென்னையில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளில்,
முறைகேடான வகையில் அனுமதியில்லாமல் விபசாரத்
தொழில் நடைபெறுவதாக விபசாரத் தடுப்புக் காவல் துறையினருக்கு ஏராளமான
புகார்கள் வந்தன.
இதனால்,
காவல் துறையினர் சென்னை வடபழனி உள்ளிட்ட
பல பகுதிகளிலும் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில்
அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது
விபசாரத் தொழிலுக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்களை
அவர்கள் மீட்டனர்.
அதேபோல
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தங்கும்
விடுதியிலும் சோதனை நடத்தினர். அங்கும்
விபசார தொழிலுக்காக சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண்
ஒருவரை காவல் துறையினர் மீட்டனர்.
சென்னை
பல்லாவரத்தில் காவல் துறையினர் ரோந்து
பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பல்லாவரத்தில் உள்ள பேருந்து நிறுத்தம்
அருகே சொகுசு காரை நிறுத்தி
வைத்துக்கொண்டு, அதற்குள் விபசாரம் செய்த இளம்பெண்கள் இருவரையும்
அவர்கள் மீட்டனர்.
காவல் துறையினர் நடத்திய இந்த சோதனைகளில்
மொத்தம் 4 தரகர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு
அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டு அரசு விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment