ஸ்மார்ட்போன்
மார்க்கெட்டில் இப்போதெல்லாம் பிக் ஸ்கீரினுடன், ஸ்லிம்மாகவும்
எடை குறைவாகவும் வரும் ஹேன்ட்செட்டுகளுக்கே கிராக்கி
அதிகம். ஜியோனி ஈ-லைப்,
அப்போ ஆர்.5 உள்ளிட்ட மொபைல்
பிராண்டுகள் மெல்லிய ஒல்லியான ஸ்மார்ட்போன்களை
அறிமுகம் செய்ய துவங்கி அதற்கு
நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
இந்நிலையில்,
சீனாவை சேர்ந்த மொபைல் தயாரிப்பு
நிறுவனமான 'விவோ' உலகிலேயே மிக
மெல்லியதாக ஸ்லிம்மான ஹேன்ட்செட் ஒன்றை தயாரித்துள்ளது. 4.75 மில்லி மீட்டர்
மட்டுமே தடிமன் கொண்ட இந்த
ஸ்மார்ட்போன் சீனாவின் சான்று தரும் ஏஜென்ஸியான
டென்னாவின் வெப்சைட்டில் மட்டுமே காணப்படுகிறது. ஆப்போ
ஆர்.5-ஐ விட 0.10 மில்லி
மீட்டர் அளவுக்கு மெல்லியதாக உள்ளது. இப்போதைய சந்தை
நிலவரத்தின் அடிப்படையில் இதுவே உலகின் மிக
மெல்லிய ஸ்மார்ட்போனாக கருதப்படுகிறது.
1.7 ஜிகா
ஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் பிராஸஸருடன்
வெளிவரும் இந்த மொபைலில் 5.5. இன்ச்
ஃபுல் ஹெச்.டி. டிஸ்பிளே,
2 ஜி.பி. ரேம் மற்றும்
ஆன்ட்ராய்டு 4.4. கிட்காட் வெர்ஷனில் இயங்குகிறது. மேலும், 13 மெகா பிக்சல் பின்புற
கேமிராவும், 5 மெகா பிக்சல் முன்பக்க
கேமிராவும் இதில் உள்ளது. மேலும்,
அதில் 4ஜி இண்டர்நெட் சப்போர்ட்டும்
உள்ளது.
இந்திய
இளைய தலைமுறையை இலக்காக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும்
'விவோ எக்ஸ் 5 மேக்ஸ்' என்ற
இந்த மொபைல் வரும் 15 ஆம்
தேதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment