முத்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்படாது என்று
கேராளா மாநில அரசு தெரிவித்துள்ளது.
கோழிக்கோடு
பஸ்நிலையத்தில் நேற்று, முத்த போராட்ட
ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே
நடைபெற்ற மோதல்கள் மற்றும் வன்முறை தொடர்பாக
அம்மாநில உள்துறை மந்திரி ரமேஷ்
சென்னிதலாவிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு
அவர் பதில் அளித்து பேசுகையில்,
"ஜனநாயக நாட்டில் யாரும் போராட்டத்திற்கு ஏற்பாடு
செய்ய மற்றும் போராட்டத்தில் ஈடுபட
உரிமை உள்ளது. எப்போது இது
சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக வரும்போது
மட்டும் அரசு தலையிடும்," என்றார்.
மாநில அரசு யாராலும் ஏற்பாடு
செய்யப்பட்ட எந்தவிதமான போராட்டத்திற்கும், எதிர்ப்பு தெரிவிக்காது. இருப்பினும், இந்திய தண்டனை சட்டம்
பிரிவு 285 கீழ், பொது இடங்களில்
ஆபாச நடவடிக்கையில் ஈடுபடுவது குற்றமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்,
முத்த போராட்டம் நடத்துபவர்களுடன் சுமுகமான அணுகுமுறையை அரசு எடுத்துள்ளது. இந்த
போராட்டத்தை தடை செய்ய அரசிடம்
எந்த திட்டமும் இல்லை. அவர்கள் போராடட்டும்.
என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜனதாவின் இளைஞர் அமைப்பான ‘பாரதீய
ஜனதா யுவமோர்ச்சா’ அமைப்பின் நன்னெறி கொள்கையை கண்டித்து
கடந்த மாதம் 2–ந் தேதி
கொச்சியில் முத்த போராட்டம் நடந்தது.
ஐ.டி. ஊழியரும்,
குறும்பட இயக்குனருமான ராகுல் பசுபாலன், ‘பேஸ்புக்’
மூலம் அழைப்பு விடுத்த இந்த
போராட்டத்தில் ஏராளமான பெண்களும், ஆண்களும்
கலந்து கொண்டனர். கேரளா மட்டுமின்றி நாடு
முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய
இந்த போராட்டம், பின்னர் சென்னை உள்பட
நாட்டின் பல பகுதிகளிலும் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக ராகுல் பசுபாலன் தலைமையிலான
குழுவினர் கோழிக்கோடு பஸ் நிலையத்தில் நேற்று
முத்த போராட்டம் நடத்தினர். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
சட்டம்–ஒழுங்கு பிரச்சினையை கருத்தில்
கொண்டு இந்த போராட்டத்துக்கு தடை
விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் நேற்று கோழிக்கோடு பஸ்
நிலையம் அருகே முத்த போராட்டத்துக்காக
சில ஆண்களும், பெண்களும் குவியத்தொடங்கினர். இதைப்போல இந்த போராட்டத்தை எதிர்த்து
அனுமன் சேனை அமைப்பை சேர்ந்தவர்களும்
மற்றொரு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோழிக்கோடு பஸ்
நிலைய பகுதியில் இந்த சம்பவங்களால் பெரும்
பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முத்த போராட்டத்தில் பங்கேற்க
வந்த 9 பெண்கள் உள்பட 48 பேரை
போலீசார் கைது செய்தனர். மேலும்
போட்டி போராட்டத்தில் இறங்கிய அனுமன் சேனை
அமைப்பை சேர்ந்த 30 பேரையும் போலீசார் பிடித்து சென்றனர். எனினும் கைது செய்யப்பட்ட
அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த
முத்த போராட்டத்தால் கோழிக்கோடு மட்டுமின்றி கேரளா முழுவதும் பரபரப்பு
ஏற்பட்டது.

No comments:
Post a Comment