மதுபோதையில்
வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்ற
வழக்கில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ்
கைது செய்யப்பட்டார்.
சொந்த ஊரான கேப்டவுனில் மதுபோதையில்,
காரை வேகமாக ஓட்டிச் சென்ற
கிப்ஸ், மற்றொரு காரின் மீது
மோதியுள்ளார். இதையடுத்து கிப்ஸை கைது செய்த
காவல்துறையினர் அவர் மீது வழக்குப்
பதிவு செய்தனர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட
போதிலும், ஓராண்டுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி, தமது செயல்
குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும்
என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே
2009-ஆண்டு இதே குற்றத்திற்காக அவர்
கைது செய்யப்பட்டார். அதில், நீதிமன்ற உத்தரவுப்படி
100 மணி நேரம் சமூகப் பணியில்
ஈடுபட்டதை அடுத்து கிப்ஸ் மீதான
வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

No comments:
Post a Comment