அஜீத்தை
கலாய்க்கும் காட்சி இருந்ததாலேயே சூரி
வீரம் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார்.
சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா, சந்தானம்,
தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த
படம் வீரம். இந்த படத்தில்
தம்பி ராமையா கதாபாத்திரத்தில் நடிக்க
முதலில் பரோட்டா சூரியை தான்
அணுகினார்களாம்.
ஆனால் கதைப்படி சூரி
அஜீத்தை கலாய்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதை
கேட்ட சூரி படத்தில் நடிக்க
மறுத்துவிட்டார்.
இது குறித்து சூரி கூறுகையில், நான்
அஜீத்தின் தீவிர ரசிகன். என்னால்
அவரை ரசிக்க மட்டுமே முடியும்.
படத்திற்காக கூட கலாய்க்க முடியாது.
அதனால் தான் வீரம் படத்தில்
நடிக்க மறுத்துவிட்டேன்.
ஆனால் நிச்சயம் நான் அஜீத்துடன் ஒரு
படத்தில் நடிப்பேன் என்றார். நான் அஜீத்தின் தீவிர
ரசிகன் என்று அடிக்கடி தெரிவிக்கும்
சூரி அவருடன் சேர்ந்து நடிக்கும்
ஆசையையும் பல முறை தெரிவித்துள்ளார்.
சூரி தற்போது கை நிறைய
படங்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment