ம.தி.மு.க.
உயர்நிலைக்குழு கூட்டம் இன்று காலை
10 மணிக்கு அவைத்தலைவர் துரைசாமி தலைமையில் தொடங்கியது. வைகோ, மாசிலாமணி, மல்லை
சத்யா, நாசரேத் துரை உள்பட
உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் 13 பேர் கலந்து கொண்டனர்.
சுமார்
3 மணி நேரம் நடைபெற்ற இந்த
கூட்டத் தில் பா.ஜனதாவுடன்
கூட்டணி தேவையா என்று விவாதிக்கப்பட்டது.
முடிவில் கூட்டணியில் இருந்து விலக முடிவு
செய்யப்பட்டது. அதற்கான தீர்மானத்தை மதியம்
1.15 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்
வைகோ முன் மொழிந்தார். அப்போது
அவர் கூறிய தாவது:-
அனைத்து
அரசியல் கட்சிகளும் நாம் எடுக்கப் போகும்
அரசியல் நிலைப் பாட்டை அகில
இந்திய அளவில் உன்னிப்புடன் கவனிக்கிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா
வுடன் கூட்டணி அமைப்பது பற்றி
3 முறை ஆலோசிக்கப் பட்டது. அந்த கட்சியின்
தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்
ராஜூலு, முரளிதரராவ் ஆகியோர் கூட்டணி தொடர்
பாக சந்தித்து பேசினார் கள்.
அப்போது
வாஜ்பாய் அரசு சிங்கள அரசுக்கு
உதவுவதில்லை என்ற உறுதிப்பாட்டில் எப்படி
இருந்ததோ அதே நிலைப்பாட்டை மோடி
அரசும் மேற் கொள்ள வேண்டும்
என்று வலியுறுத்தப் பட்டது. அதற்கு பா.ஜனதா தரப்பில் மறுப்பு
ஏதும் தெரிவிக்க வில்லை.
ஆனால் மோடி அரசு பதவி
ஏற்பு விழாவுக்கு ம.தி.மு.க.வின் கோரிக்கையை
புறக்கணித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை
அழைத்தார்கள். அதை கண்டித்து டெல்லியில்
ஆர்ப் பாட்டம் நடத்திய ம.தி.மு.க. வினர் கைதானார்கள்.
இப்போதும் ராஜ பக்சேவுக்கு இந்தியாவின்
உயர்ந்த விருதான பாரதரத்னா விருது
வழங்க வேண்டும் என்று பா.ஜனதாவுக்குள்
புகுந்த புல்லுருவி கூறியதை கண்டிக்கவில்லை.
இப்போது
மோடி அரசு தமிழர்களை சீண்டிப்
பார்க்கும் வகையில் நாளை (9-ந்தேதி)
ராஜபக்சேவை திருப்பதிக்கு அழைத்து வரவேற்க ஏற்பாடு
செய்துள்ளது.
இது தமிழர்களை கிள்ளுக் கீரையாக நினைப்பதாகும். தமிழக
சட்டமன்றத்தில் இலங்கைக்கு எதிராக நிறை வேற்றப்பட்ட
தீர்மானத் தையும் மத்திய அரசு
அவமதிக்கும் வகையில் செயல்பட்டது. தொடர்ந்து
சிங்கள அரசுக்கு ஆதரவாக செயல்படும் நிலையையே
உலக அளவிலும் எடுத்து வருகிறது.
பா.ஜனதா அரசு சிங்கள
அரசுடன் கூடிக் குலாவுவ தாலும்
தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாலும்
2014-ல் இடம் பெற்ற தேசிய
ஜன நாயக கூட்டணியில் இனி
எவ்வித உடன்பாடும் இல்லை, உறவும் இல்லை.
கூட்டணியில் தொடருவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு
வைகோ கூறினார்.

No comments:
Post a Comment