சமீபத்தில்
ஒரு நிகழ்ச்சியில் பேசிய உத்திரபிரதேச மந்திரி
ஆசம்கான்,கடந்த நவமபர் மாதம்
13-ந்தேதி பேசும் போது தாஜ் மகாலை உ.பி.மாநில வக்பு
வாரியத்தின் சொத்தாக அறிவிக்க வேண்டும்.
தாஜ்மகாலின் நிர்வாகி யாக என்னை நியமிக்க
வேண்டும் என்று கூறினார். இது
பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், உத்திரப் பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி
காந்த் பாஜ்பாய் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது
தாஜ்மகால் இருக்கும் இடத்தில் முன்பு தேஜோ மகாலய
கோவில் இருந்தது. அந்த கோவில் நிலத்தை
ராஜா ஜெய்சிங்கிடம் இருந்து முகாலய பேரரசர்
ஷாஜகான் விலைக்கு வாங்கினார். இதற்கான ஆவணங்கள் உள்ளன.
இந்த இடத்தில் தான் தாஜ்மகால் கட்டப்பட்டுள்ளது.
அதில் கோவிலின் ஒரு பகுதியும் அடங்கும்.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான அசம்
கான் முதலில் வக்பு வாரிய
சொத்துகளை அபகரித் தார்.
இப்போது,
அவர் தாஜ்மகாலை குறி வைத்துள்ளார். தாஜ்மகாலில்
5 முறை தொழுகை நடத்த வேண்டும்
என்ற அவரது கனவு ஒரு
போதும் நிறைவேறாது.
இவ்வாறு
அவர் கூறி னார்.
உ.பி. மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமி
காந்த்பாஜ் பாயின் இந்த பேட்டி
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, இந்திய
சியாசட்ட அமைப்பு தாஜ்மகால் நாட்டின்
சொத்து அதை சன்னி அமைப்பிடமோ
அல்லது ஷியா அமைப்பிடமோ கொடுக்கக்
கூடாது. ஏற்கனவே அவர்களிடம் உள்ள மசூதிகளை அந்த
இரண்டு பிரிவினரால் பராமரிக்க முடியவில்லை. தாஜ்மகாலை எப்படி அவர்களால் பரா
மரிக்க முடியும் என்று கேட்டுள்ளது

No comments:
Post a Comment