ஆபாசமாக
நடிக்க மாட்டேன் என்று நய்யாண்டி படத்தில்
முரண்டு பிடித்தார் நஸ்ரியா நாசிம். இதனால்
இயக்குனருடன் மோதல் நடந்து ஒருவழியாக
முடிவுக்கு வந்தது சண்டை. அத்துடன்
கேரளாவுக்கு சென்றவர், நடிகர் பஹத் பாசிலை
திருமணம் செய்துகொண்டு செட்டிலானார்.
பஹத் பாசிலுக்கு சமீபகாலமாக
படங்களில் ஹீரோயின்களுடன் நெருக்கமான காட்சிகள் நடிக்க வேண்டி உள்ளதாம்.
கணவரை நெருக்கமாக நடிக்கக்கூடாது என்று கண்டிஷன் போடும்
மனைவிமார்கள் நிறையபேர் உண்டு. நஸ்ரியா அப்படி
எந்த கண்டிஷனும் பஹத்துக்கு போடுவதில்லையாம்.
இதுபற்றி
பஹத்திடம் கேட்டபோது,‘அது உண்மைதான். கதைக்கு
ஏற்ப ஹீரோயின்களுடன் நான் நெருக்கமாக நடிக்க
வேண்டி இருந்தால் அதுபற்றி என் மனைவி நஸ்ரியா
கவலைப்பட மாட்டார்.
அப்படி நடிக்கக்கூடாது என்று
கண்டிஷனும் போடமாட்டார். சினிமாவில் நான் எப்படி நடித்தாலும்
அது நடிப்புதான் என்பது நடிகையாக இருப்பதால்
அவருக்கு தெரியும்' என்றவரிடம், ‘திருமணத்துக்கு பிறகு உங்கள் ரசிகைகள்
வட்டம் குறைந்துவிட்டதா? என்றதற்கு, ‘என்னுடைய மார்க்கெட் நிலவரத்தைவிட நஸ்ரியாதான் எனக்கு முக்கியம்‘ என்று
பெரிய ஐஸ்கட்டியை தூக்கி நஸ்ரியா தலையில்
வைத்தார் பஹத்.
No comments:
Post a Comment