தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் 1964-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை ராணுவ சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது. அக் காலகட்டத்தில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்த மக்களை ராணுவம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு கொடுமை படுத்தப்பட்டார்கள்.
மக்கள் ஆதரவுடன் ராணுவ ஆட்சி தூக்கி வீசப்பட்டது. ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதன் பின்னர் இடதுசாரிகள் தேர்தலின் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த தேர்தலில் ஜனாதிபதியாக இடதுசாரி கொள்கை உடைய தில்மா ரூசெப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். த்ற்போதைய அதிபர் தில்மா ரூசெப் சர்வாதிகார கொடுங்கோல் அப்போதைய ராணுவ ஆட்சியை எதிர்த்தார். இதனால் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சர்வாதிகார ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகளை அறிய தேசிய உண்மை கண்டறியும் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இக் குழு கடந்த 3 வருடங்களாக பிரேசில் முழுவதும் விசாரணை நடத்தி அந்நாட்டு அரசிடம் 2 ஆயிரம் பக்கங்கள் கொண்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த குழு தனது அறிக்கையில் 191 பேர் கொல்லபட்டதாகவும், 210 பேர் மாயமானதாகவும் இதி 33 பேரின் சடலங்கள் மீடகபட்டதாகவும் விசர்ரணைக்குழு சுட்டிக்காட்டி உள்ளது.
அறிக்கையில் அமெரிக்க ராணுவம அதிகாரிகள் பிரேசிலில் தங்கி இருந்து பிரேசில் ராணுவத்திற்கு சித்தரவதை நுட்பங்களை கற்பித்து உள்ளனர். பிறப்பு உறுப்பின் மின்சாரம் பாய்ச்சுதல், கற்பழித்தல், மனரீதியான சித்ரவதைகள் போன்றவை செய்யபட்டதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரேசில் மனித உரிமை அமைப்பின் இயக்குனர் மரியா லாரா கனியு, விசாரணைக்குழு அறிக்கையில் மனித உரிமைகளை மீறி சித்ரவதை செய்ததாக 377 பேர் குற்றவாளிகள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது. எனவே குற்றவாளிகள் தப்ப முடியாது என்றார்.
இது பற்றி பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் அந்நாட்டு மக்களுக்கு உருக்கமான் உரையாற்றினார் அப்போது அவர் கூறியுள்ளதாவது:-
பிரேசிலில் கடந்த 1964-ம் ஆண்டு முதல் 1985-ம் ஆண்டு வரை நடைபெற்ற சர்வாதிகார ஆட்சி வீழ்ந்து நாம் இப்போது சுதந்திரமாக உள்ளோம். சர்வாதிகார ஆட்சியில் மக்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். ராணுவத்தால் பலர் சித்ரவதை செய்யப்பட்டனர். குற்றம் செய்தவர்கள் நீதி முன்பு நிறுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கொடுங்கோல் ஆட்சியில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன்.
1970ஆம் ஆண்டு எனக்கு 22 வயது. அந்த ஆட்சியை எதிர்த்தேன் என்ற ஒரே காரணத்துக்காக நான் கைது செய்யப்பட்டேன். சிறையில் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்து கொடுமைப்படுத்தினார்கள். கரண்ட் ஷாக் கொடுத்தனர். பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். என்னையும், எனது 2 குழந்தைகளையும் சிறைக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கும் என்னை குழந்தைகள் முன்பு மிருகத்தனமாக அடித்தார்கள். இதில் நான் பலத்த காயம் அடைந்தேன். காயங்களில் இருந்து வழிந்த ரத்தம் உடல் முழுவதும் வழிந்து காய்ந்து போய்விட்டது. இதைபார்த்து என்னுடன் இருந்த எனது 4 வயது மற்றும் 5 வயது வயது குழந்தைகள் என்னை பார்த்து "அம்மா உன் உடல் ஏன் இப்படி நிறம் மாறி இருக்கிறது" என்று அப்பாவியாக கேட்டது இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை.
இதேபோல் எனது கர்ப்பிணி சகோதரியும், அவரது கணவரும் சித்ரவதை செய்யப்பட்டனர். அவரது கட்சி உறுப்பினர், அவரது கண்முன்னால் அடித்து கொல்லப்பட்டார். இந்த சித்ரவதைகளுக்கு யார் எல்லாம் காரணம் என்று எனக்கு நன்றாக தெரியும். அவரும், அவரது குடும்பத்தினரும் இப்போது சுதந்திரமாக சுற்றுகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தில்மா ரூசெப் கூறினார்.

No comments:
Post a Comment