சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை இலங்கை வீரர் சங்கக்கரா வேகமாக நெருங்கிவருகிறார். இதே வேகத்தில் அவர் போனால், சச்சினின் சாதனையை முறியடித்துவிடக் கூடும்.
இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்கரா, தான் களமிறங்கும் பெரும்பாலான போட்டிகளில் முத்திரை பதித்துவிடுவார். போகிறபோக்கில் பல சாதனைகளையும் தகர்த்துவிடுவார்.
அப்படித்தான் சமீபத்தில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய சங்கக்கரா, அடுத்து இந்திய ஜாம்பவான் சச்சினின் அதிக அரைச்சத சாதனையை முறியடிக்கும் முனைப்பில் இருக்கிறார்.
452 ஒருநாள் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சச்சின், 96 அரைச்சதங்களை விளாசியுள்ளார். ஆனால், மூன்றாவது போட்டியின்போது 386 இன்னிங்ஸ் விளையாடியிருந்த சங்கக்கரா 89 அரைச்சதங்களைத் தாண்டிவிட்டார்.
சச்சினின் சாதனையை முறியடிக்க சங்கக்கராவுக்கு இன்னும் 8 அரைச்சதங்கள் மட்டுமே தேவை. உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன் இலங்கை குறைந்தது 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். எனவே, உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பே, சச்சினின் சாதனையை சங்கக்கரா முறியடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது விளையாட்டு விமர்சகர்கள் கருத்து.
அதிக ஒருநாள் போட்டி அரைச்சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் ஜாக்வஸ் காலிஸ் (86 அரைச்சதங்கள்), ராகுல் டிராவிட் (83), இன்சமாம்-உல்-ஹக் (83), ரிக்கி பாண்டிங் (82), மகிள ஜெயவர்த்தனே (76), சவுரவ் கங்குலி (72), சனத் ஜெயசூரியா (68), முகமது யூசுப் (64) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.
சாதனைகள் என்பவையே முறியடிப்பதற்குத்தானே? அதனால் சச்சின் ரசிகர்கள் இதில் ஆதங்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அதிக சதம், அதிக ரன்கள் என்ற சச்சினின் சில சாதனைச் சிகரங்களை என்றும், எவராலும் எட்டமுடியாமலே போகலாம்!

No comments:
Post a Comment