Saturday, December 20, 2014

பாஜகவில் இன்று சங்கமம் ஆகும் சிவாஜி வாரிசு

பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா முன்னிலையில் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா இன்றும் நாளையும் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 

அமித்ஷாவின் இந்த வருகையின் போது முக்கிய பிரமுகர்கள், அரசியலில் ஒதுங்கியிருப்பவர்கள் பலரையும் பாஜகவில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

காங்கிரசை விட்டு ஒதுங்கியிருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன், பாஜகவில் இணையக் கூடும் என்று கூறப்படுகிறது. சினிமா இசை அமைப்பாளர் கங்கை அமரனும் பா.ஜனதாவில் சேருகிறார். 

நேற்று மாலையில் பாஜக அலுவலகத்துக்கு சென்று தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரை சந்தித்து கட்சியில் சேர தனது விருப்பத்தை தெரிவித்தார். 

இன்று மாலையில் அமித்ஷா முன்னிலையில் கங்கை அமரன் பாஜகவில் இணைகிறார். இதே போல் நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் இன்று அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


1 comment:

  1. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.

    ReplyDelete