சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து தமக்கு நெருக்கடி கொடுத்து வந்தால் பிரதமர் பதவியை தாம் ராஜினாமா செய்துவிடுவேன் என்று சங்பரிவார் மற்றும் பாஜக தலைவர்களிடம் பிரதமர் மோடி கூறியதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக இந்துத்துவா அமைப்புகள் ராமர் கோவில் கட்டியே தீருவோம்; மதமாற்றத் தடை சட்டத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும்; நாடு முழுவதும் கோட்சேக்கு சிலை அமைப்போம் என்றெல்லாம் தொடர்ந்தும் பேசுவதும் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதும் தொடர் கதையாகி வருகின்றன.
மத்திய அமைச்சர்கள், இந்துத்துவா அமைப்புகள் தெரிவித்து வரும் இந்த சர்ச்சைக்குரிய கருத்துகளால் நாடாளுமன்றம் அமளிக்காடாக முடங்கிப் போய் கிடக்கிறது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், இந்துத்துவா தலைவர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நோக்கமே நல்ல நிர்வாகத்தைத் தருவதுதான்.. ஆனால் இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி அந்த நோக்கத்தை சீர்குலைக்கிறீர்கள் என்று அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
மேலும் அரசை சுதந்திரமாக இயங்க விடாமல் தடுத்தால் ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டேன்.
மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருப்பதே வளர்ச்சி மற்றும் நல்ல அரசு நிர்வாகத்துக்குத்தான்.. ராமர் கோவில் கட்டுவது போன்ற பிரச்சனைகளை விட நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதுதான் முக்கியமானதாகும் என்றும் கூறியிருக்கிறார் மோடி.
கடந்த வாரம்தான் பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அமைச்சர்கள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்; லட்சுமண ரேகையை மீறக் கூடாது என்று எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment