பிரபல நடிகை மஞ்சுவாரியாரும்– திலீப்பும் பிரிவதற்கு காரணமாக பேசப்படுபவர் நடிகை காவ்யா மாதவன். மன அமைதிக்காக சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வெடுத்த இவர், 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரை நோக்கி வீசப்படும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் தருகிறார்.
நீங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக நடிக்கவில்லை. அப்போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
மனதளவில் என்னை நான் உற்சாகப்படுத்திக்கொள்ள அந்த இடைவெளி பயன்பட்டது. எனது சிந்தனையிலும், எனது பார்வையிலும் மாற்றங்கள் ஏற்பட அந்த காலகட்டம் உதவியிருக்கிறது. பி.காம். படிப்பை பூர்த்தி செய்திருக்கிறேன். நடன பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டேன். நடன நிகழ்ச்சிகளும் நடத்தினேன். பெயிண்டிங், சமையலில் என் திறமையை வளர்த்துக்கொண்டேன். அண்ணனின் கல்யாண ஏற்பாடுகள் அனைத்தையும் கவனித்தேன். எனது திருமண ஏற்பாட்டில்கூட நான் இவ்வளவு ஆர்வம் செலுத்தியதில்லை. மனதால் நான் ஒரு சாதாரண பெண் போல் வாழ ஆசைப்பட்டேன். அதை அந்த ஒரு வருடத்தில் நான் அனுபவித்து வாழ்ந்திருக்கிறேன்.
ஆனாலும் அந்த காலகட்டத்தில் உங்களுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டிருக்கும்தானே?
மனஅழுத்தம் ஏற்படத்தான் செய்யும். என் வாழ்க்கையே சினிமா என்றாகிவிட்டது. நான்கு வயதில் இருந்து நடித்துக்கொண்டே இருக்கிறேன். வருகிற படங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டேன். ஒருகட்டத்தில் நான் படங்களை தேர்ந்தெடுக்கும் முறை சரியில்லையோ என்று சந்தேகப்பட்டேன். நாட்டை விட்டே வெளியேறிவிடவேண்டும். யாரும் என்னை காணாத புதிய வாழ்க்கை வாழவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன்.
உங்களை பற்றி பலவிதமான வதந்திகள் வந்துகொண்டே இருக்கிறதே?
நான் அதை எல்லாம் படிப்பதில்லை. ஆனால் சில நண்பர்கள் அதை வாட்ஸ்அப்பில் அனுப்புவார்கள். நான் அதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அனுப்புவார்களாக இருக்கலாம். ஆனால் என்னை வேதனைப்படுத்துவதுதான் அதன் நோக்கம்.
உங்களை தனிமைப்படுத்த திட்டமிட்டு யாராவது இதை செய்கிறார்களா?
அப்படியா! அதுபற்றி எனக்கு தெரியாது. அப்படி யாருக்காவது ஒரு ஆசை இருந்தால் அவர்கள் சந்தோஷப்பட்டுக்கொள்ளட்டும்!
ஒரு நடிகர் கேட்டுக்கொண்டதால்தான் நீங்கள் மீண்டும் நடிக்க வந்திருக்கிறீர்களாமே?
நான் புதிய சினிமாக்களில் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் நான் சினிமாவில் இருந்து விலகப்போவதாகவும் சொன்னார்கள். என் வாழ்க்கையை தீர்மானிப்பது மற்றவர்களாக இருப்பதுபோல் தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்யட்டும்..!
திலீப்பும், நீங்களும் இணைந்து இப்போது ஏன் நடிக்கவில்லை?
வெள்ளரி புறாவின்ற சங்காதி என்ற படத்தில் கடைசியாக நாங்கள் நடித்தோம். அதன் பின்பு எங்களை ஜோடியாக்கி படம் எடுக்க விரும்பி என்னை யாரும் அணுகவில்லை. திலீப்பை யாராவது அணுகினார்களா என்று தெரியாது. நல்ல சினிமாவில் அவரது ஜோடியாக நடிக்கசொன்னால், நான் நடிப்பேன்.
எப்படியோ நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்கள் அப்படித்தானே?
ஆமாம். வாழ்க்கையில் நான் இன்னும் கொஞ்சம் செட்டில் ஆகவேண்டும். சில கடமைகள் பாக்கி இருக்கின்றன. ஒரு மகளாக இருந்து செய்யவேண்டிய கடமைகள் அவை.
உங்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைப்பது அவர்கள் கடமை அல்லவா?
எனக்கு இப்போது அப்படி ஒரு எண்ணமே இல்லை. எனக்கு அப்படி ஒரு யோகம் இருக்கும்போது, அதை பற்றி யோசிக்கலாம். திருமணம்தான் பெண்ணின் வாழ்க்கை லட்சியம் என்று அப்போது நான் நினைத்ததுண்டு. இப்போது அப்படி நினைக்கவில்லை.
இந்த காலத்திலும் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு நடிக்கவரும் நடிகை நீங்கள் மட்டும்தான்..?
அது தவறாக எனக்கு தெரியவில்லை. அது என்னிடம் இருக்கும் மாற்ற முடியாத பழக்கம். தனியாக பயணிப்பதும், வாழ்வதும் இன்றைய பெண்களின் சுதந்திர சிந்தனையை காட்டுகிறது. அவர்கள் துணையில்லாமல் வாழும் தைரியம் கொண்டவர்கள். எனக்கு அப்படியல்ல, எனது எல்லா தேவைகளுக்கும் பெற்றோர் தேவை.
பெற்றோர் எப்போதும் துணையிருப்பதால் தனக்கு இன்னொரு வாழ்க்கை துணை தேவையில்லை என்று கருதுகிறீர்களா?
தனியாக இருக்கும்போது ஒரு துணை தேவை என்று நினைப்போம். ஆனால் திருமணம் செய்துவிட்டால் நான்காம் நாளே, திருமணம் செய்திருக்க வேண்டாமே என்று நினைப்போம். இப்படி ஒரு எண்ணம் எனக்கு மட்டும்தான் வந்ததா என்று நினைத்து, திருமணமான பல பெண்களிடம் கேட்டேன். ‘ஒரு அட்ஜஸ்ட்மென்டில் வாழ்க்கை எப்படியோ போய்க்கொண்டிருக்கிறது’ என்ற சலிப்புதான் பதிலாக கிடைத்தது.
அப்படியானால் திருமணம் என்ற கட்டமைப்பை நீங்கள் வெறுக்கிறீர்களா?
இல்லை. என் தாயும், தந்தையும் என் திருமணத்தை நல்லபடியாக, ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று நினைத்தார்கள். அப்படியே நடந்தது. ஆனால் அந்த வாழ்க்கை வெற்றியடையாததற்கு அவர்கள் காரணமில்லை.
திலீப்– மஞ்சுவாரியார் பிரிவிற்கு நீங்கள் காரணம் என்கிறார்களே?
எல்லாவற்றிற்கும் நானா காரணம்! இத்தகைய வதந்திகள் என்னை ஒருபோதும் பாதிக்காது. இதை பற்றி ஏதாவது சொல்வதற்குரிய நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன்.
உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
ஒருகாலத்தில் திட்டங்கள் போட்டு வாழ முயற்சி செய்தேன். என்ன ஆனது? நினைத்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. அதனால் வருவதுவரட்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

No comments:
Post a Comment