கர்நாடகத்தில்
காவிரி ஆற்றின் குறுக்கே அணை
கட்டுவது சரியான நடவடிக்கையே என
பரபரப்பு கருத்தைத் தெரிவித்துள்ளார் ரஜினியின் மூத்த சகோதரர் சத்யநாராயணா.
காவிரி
ஆற்றின் குறுக்கே இரண்டு அணைகளைக் கட்ட
திட்டமிட்டுள்ளது கர்நாடகா. இதற்கு தமிழக அரசியல்
கட்சிகளும், டெல்டா மாவட்ட விவசாயிகளும்
கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்துள்ளது. காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில்
விவசாயிகள் பந்த் நடத்தியுள்ளனர். தொடர்ந்து
போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இவ்வாறு
கர்நாடகா அணை கட்டுவதன் மூலம்
தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர்
கிடைக்காது, விவசாயம் பாதிக்கப்படும் என அவர்கள் போராடி
வருகின்றனர். இந்நிலையில் திருச்சி வந்த நடிகர் ரஜினிகாந்தின்
சகோதரர் சத்யநாராயணா அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது
அவர் கூறுகையில், கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே
அணை கட்டுவது சரியான நடவடிக்கையே. இப்புதிய
அணைகள் மூலம் இரு மாநில
மக்களும் நன்மை அடைவார்கள்.
தமிழக அரசியல்வாதிகள் ஏமாற்றுக்காரர்கள். ரஜினி உண்மையானவர். சந்தர்ப்ப
சூழ்நிலை அரசியல்வாதிகளை ஏமாற்றுக்காரர்கள் ஆக்கி விடுகிறது. ரஜினியை
அரசியலுக்கு அழைக்காதீர்கள். அவர் அரசியலுக்கு வரமாட்டார்
என்று அவர் கூறினார்.

No comments:
Post a Comment