பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்யும் வரைவு மசோதாவை ஐ.நா.வில் தாக்கல் செய்வதற்கான பணிகளை அந்த நாடு உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாலஸ்தீன வெளியுறவுத் துறை அமைச்சர் ரியாத் அல்-மால்கி கூறியதாவது:
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கப்படுவதற்கான செயல்திட்டம் அடங்கிய வரைவு மசோதா தயாராகி வருகிறது.
அதிலுள்ள அம்சங்கள் குறித்து பிரான்ஸýடன் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அந்த மசோதாவைத் தாக்கல் செய்வோம் என்றார் அவர்.
முன்னதாக, அரபு நாடுகளின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்படவிருந்த மசோதாவில், வரும் 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், பிரான்ஸின் தலையீட்டையடுத்து அதற்குப் பதிலாக, 2 ஆண்டுகளில் பாலஸ்தீனப் பிரச்னைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கான செயல் திட்டம் மட்டும் கொண்ட மசோதாவை பாலஸ்தீனம் உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment