இந்த வருடம் அனைவரின் கவனமும் ஐ படத்தின் மீதுதான் உள்ளது.
விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடிக்க ஷங்கர் இயக்கியுள்ள படம் ஐ. ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்ரம் 40 கிலோ கொண்ட ஒல்லிப் பிச்சானாகவும், 110 கிலோ எடை கொண்ட மாமிச மலையாகவும், "அந்நியன்' ரெமோ டைப்பிலான லவ்வர் பாயாகவும் நடித்திருக்கிறார். இதுதவிர நான்கு கெட் அப்கள் வேறு இருக்கிறது.
படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனிடையே ஐ படம் தணிக்கைக் குழு சான்றிதழுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனால் ஐ படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
பொதுவாக ஒரு படத்திற்கு யு சான்று கிடைத்தால் மட்டுமே அரசின் வரி விலக்கு பெற இயலும். ஆனால் இப்போது ஐ படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஐ படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யு சான்று பெறும் முயற்சியில் படக்குழுவினர் இறங்குவார்கள் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இதனிடையே நேற்று இரவு 'ஐ' பட புத்திய ட்ரைலர் ( அதை பார்க்க ) வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment