கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் ‘நான் ஈ’ சுதீப் நடிக்கப் போவதாக ஏற்கனவே சினி ரீலில் எழுதியிருந்தோம். திடீரென்று ‘லிங்கா’வை இயக்க வேண்டி இருப்பதால், சுதீப்பிடம் என்ன சொல்வது என்று தர்மசங்கடத்தில் இருந்தார் ரவிக்குமார். பெருந்தன்மைக்கு பெயர் போன சுதீப்போ, ‘அதனால் என்ன, சூப்பர் ஸ்டார்தான் நமக்கு முக்கியம்.
அடுத்த வருஷம் நம்ம படத்தை பண்ணிக்கலாம் சார்’ என்று விலகிக் கொண்டார்.நட்புக்கு மரியாதை கொடுக்கக்கூடியவரான கே.எஸ்.ஆருக்கு உள்ளுக்குள் லேசாக உறுத்தல் இருந்துகொண்டேதான் இருந்தது. இதை உணர்ந்து கொண்ட சுதீப், ‘லிங்கா’ ஷூட்டிங் நடைபெற்ற சிவமோகாவுக்கு கடந்த செப்டம்பரில் நேராகவே போனார். கே.எஸ்.ரவிக்குமாரை வாழ்த்தி விட்டு, ரஜினியிடம் ஆசி பெற்றார். கூட நின்று க்ரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். தன்னுடைய தமிழ் ப்ராஜக்ட் தள்ளிப் போனது பற்றி தனக்கு எந்த வருத்தமுமில்லை என்பதை வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார்.
இதெல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். புதுசு என்னவென்றால் ‘லிங்கா’வில் ஒரு காட்சியில் தலைகாட்டும் ‘கேமியோ’ ரோலில் சுதீப்பும் தோன்று கிறார் என்பதுதான். படத்துக்கு எண்ட் கார்ட் போடும்போது டைட்டிலில் சுதீப்பின் பெயரும் வந்தாகவேண்டும் என்று ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார்.
அதற்காகவே ஒரு காட்சியில் இவரை நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று பரபரப்பான தகவல்கள் கர்நாடகாவிலிருந்து கசிகின்றன.ரஜினியோ, ரவிக்குமாரோ, சுதீப்போ இதுபற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்கள். ஆனால், வாய்மொழியாக சுதீப் ரசிகர்களிடம் இத்தகவல் எபோலாவாக பரவிவருகிறது.

No comments:
Post a Comment