இந்திய
அரசியல்வாதிகள் தடலாடியாக சில கருத்துகளைத் தெரிவித்துவிட்டு
சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது அண்மைக்காலமாக அதிகரித்து
வருகிறது..
பிரதமர்
மோடி, அவரது அமைச்சர் சாத்வி
நிரஞ்சன் ஜோதி, மேற்கு வங்க
முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட
பலருக்கும் இந்த சர்ச்சைப் பேச்சு
பட்டியலில் இடமிருக்கிறது.
மத்திய
அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்த
நாட்டின் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ராமரின் பிள்ளைகள் என்று
கூறப் போய் பெரும் சர்ச்சை
வெடித்தது. இதில் அவர் நாடாளுமன்ற
இரு சபைகளிலும் மன்னிப்பு கேட்டும் பிரச்சனை ஓயவில்லை.
இதேபோல் சர்ச்சைக்குரிய கருத்துகளை
தெரிவித்தவர்கள்...
# 2002ஆம்
ஆண்டு குஜராத் கலவரங்கள் குறித்து
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த
பிரதமர் மோடி, நாம் பயணம்
செய்யும்போது காரில் நாய்க்குட்டி அடிப்பட்டால்
வருத்தப்பட மாட்டோமா என்று கூறியிருந்தார். பின்னர்
தமது கருத்துகள் திரிக்கப்பட்டுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார் மோடி.
# விநாயகன்
உடலில் யானை தலை பொருத்தப்பட்ட
காலத்திலேயே தொடங்கிவிட்டது பிளாஸ்டிக் சர்ஜரி முறை என்று
மோடி பேசியதும் சர்ச்சையை உருவாக்கியது.
# உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் லோக்சபா
தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், குஜராத்தைப்
போல உத்தரப்பிரதேசத்தையும் மாற்றிவிடலாம் என மோடி கருதுகிறார்.
குஜராத்தில் 4% முஸ்லிம்கள்தான்... உத்தரப்பிரதேசத்திலோ 42% முஸ்லிம்கள் இருக்கின்றனர். அப்படி மோடி நினைத்தால்
அவரை துண்டு துண்டாக வெட்டிப்
போடுவேன்.. ஒருவரை கொல்லவோ தாக்கவோ
நான் பயப்படமாட்டேன் என்று கூறினார். ஆம்
# ஆத்மி
மூத்த தலைவர் சோம்நாத் பார்தி,
மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் ஷால்வே மற்றும்
அருண்ஜேட்லி முகத்தில் காரித் துப்புவேன் என்று
பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சை
வெடித்தது.
# லோக்சபா தேர்தலின் போது,
பிரதமர் மோடியை மேற்கு வங்க
முதல்வர் மமதா பானர்ஜி "கழுதை"
என விமர்சித்ததும் பஞ்சாயத்தை ஏற்படுத்தியது.
# பீகார்
முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி, பீகாரின் பூர்வடிகள்
பழங்குடி இனத்தவர்; தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே. இதர
உயர்ஜாதியினர் எல்லாம் ஆரியவழித்தோன்றல்கள்.. வெளிநாட்டில் இருந்து
இங்கே வந்து குடியேறியவர்கள் என்று
விமர்சிக்க அவர் மீது வழக்குகளும்
போடப்பட்டன.
# தேசியவாத
காங்கிரஸ் தலைவர் சரத்பாவர், பிரதமர்
மோடியை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க
வேண்டும் என்று சாடியிருந்தார்.
# சமாஜ்வாடி
கட்சியின் மூத்த தலைவர் ஆசாம்
கான், மோடியை ஒரு பெரிய
நாய் என்றும் காங்கிரஸ் கட்சியின்
பேனிபிரசாத் வர்மா நாய் என்றும்
சாடி பெரும் சர்ச்சை உருவானது.

No comments:
Post a Comment