தெலுங்கு
பட சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின்
நடிப்புக்கும், நடனத்துக்கும் தனி ரசிகர் வட்டம்
இருக்கிறது. அவர் அரசியலில் நுழைந்தபிறகு
படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் அவரை எங்கு
பார்த்தாலும், ‘அடுத்த படம் எப்போ
நடிக்கப்போறீங்க' என்று ரசிகர்கள் நச்சரிக்கின்றனர்.
அவர்களின்
ஆசையை பூர்த்தி செய்வதாக கூறிய சிரஞ்சீவி, புதுபடத்தில்
நடிக்க தயாராக இருக்கிறார். கடந்த
2 வருடமாக இதற்காக கதை கேட்டு
வருகிறார்.
அடுத்து
நடிக்கப்போவது 150வது படம் என்பதால்
அப்படம் ஹிட்டாக அமைய வேண்டும்
என்று எண்ணுவதாக அவரது தரப்பு சொல்கிறது.
இனிமேல் சிரஞ்சீவியின் நடனத்தை பார்க்க முடியாது.
ஏற்கனவே
நடித்த படங்களில்தான் அதைப்பார்க்க முடியும் என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு விருந்தாக சமீபத்தில் ஆந்திராவில் நடந்த ஹூட்ஹூட் புயல்
நிவாரண நிதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
கலக்கல் ஆட்டம்போட்டார் சிரஞ்சீவி. அவரது அடுத்த பட
அறிவிப்பு மிக விரைவில் இருக்கும்
என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருடன்
ஜோடியாக நடிக்க இளவட்ட ஹீரோயின்கள்
முதல் சீனியர் ஹீரோயின்கள் வரை
இப்போதே அவருக்கு தூதுவிட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

No comments:
Post a Comment