Thursday, December 18, 2014

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம பெண்கள் கடலில் குதித்து தற்கொலை

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரம பெண்கள் 3 பேர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே தந்திராயன்குப்பம் கடற்கரையில் 3 பெண்களின் உடல் மீட்டப்பட்டன. ஆசிரமப் பெண்கள் அருணாஸ்ரீ, ராஜஸ்ரீ மற்றும் அவர்களது தாய் தற்கொலை செய்து கொண்டனர்.  

2 பெண்கள் மற்றும் தந்தை  உயிருடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து 5 பெண்கள் நேற்று வெளியேற்றம் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து 5 பேரும் கடலில் குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர். 

No comments:

Post a Comment