லிங்கா படத்தால் நஷ்டம் என்று கூறி போராட்டம் நடத்தப் போவதாகக் கூறி வந்த விநியோகஸ்தர், இப்போது அதைக் கைவிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கூறியதால் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறியுள்ளார். ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி அவர் பிறந்த நாளன்று உலகெங்கும் வெளியானது.
வெளிநாடுகளில் நல்ல வசூலைக் குவித்துள்ளது. தமிழகத்தில் பெரும் வரவேற்புடன் படம் தொடங்கியது. ஆனால் முதல் மூன்று நாளுக்குப் பிறகு வசூல் குறைந்துவிட்டதாகவும், நஷ்டம் என்றும் கூறிக் கொண்டு சிங்காரவேலன் என்பவர் புகார் கூற ஆரம்பித்தார்.
படம் வெளியான ஒரு வாரத்தில், அதுவும் அரங்கு நிறைந்த காட்சிகளாக பல ஊர்களில் ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் எப்படி நஷ்டம் என்று கூறுகிறீர்கள் என்று கேட்டபோது, மூன்று நாளைக்குள் எங்களுக்கு பணம் வந்துவிட வேண்டும் என்றார்.
மேலும் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், ரஜினி எங்களுக்கெல்லாம் கொடுப்பதற்கென்றே ஒரு தொகையை ஒதுக்கி வைப்பார். அதைப் பெற இப்போதிலிருந்தே முயற்சிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
எனவேதான் இன்று இந்தப் பிரச்சினையை ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் ஊர்வலம் நடத்தப் போவதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் வேந்தர் மூவீஸ் சார்பில் அவரை அழைத்துப் பேசியதாகவும், அதனால் போராட்டத்தைக் கைவிட்டு, கிறிஸ்துமஸ் வரை பொறுத்திருக்கப் போவதாகவும் கூறினார்.
அதற்குள் தங்கள் தொகை வசூலாகிவிடும் என வேந்தர் மூவீஸ் சொல்வதை நம்பி அமைதி காப்பதாகவும் சிங்கார வேலன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment