பிரதமர் நரேந்திர மோடி, அவரது மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகள் இந்தி மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். அன்றாட அலுவல்களில் அவர்கள் இந்தி மொழியையே பயன்படுத்துகின்றனர். பிரதமர் மோடி, ஐ.நா. சபையில் ஆற்றிய முதல் உரையையே இந்தியில் தான் ஆற்றினார்.
உலகத் தலைவர்களுடனும் அவர் இந்தியில் தான் பேசுகிறார்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழித்துறை, இந்தி மொழியை பரப்புவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக, பொதுத்துறை வங்கிகளின் இணையதள வழி வங்கிச்சேவைகளிலும், மொபைல் வங்கிச்சேவைகளிலும் இந்தி மொழியை பயன்படுத்துவதற்கான வசதி இல்லை என அந்த துறை கருதுகிறது. அதை போக்கும் விதத்தில், அந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கு உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழித்துறை செயலில் இறங்கி உள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற, நிதிப்பணிகள் துறைக்கு, உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழித் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன் சாராம்சம் வருமாறு:-
* வங்கிச் சேவைகளில், வாடிக்கையாளர்களுக்கு அனுப்புகிற இ மெயில்கள், எஸ்.எம்.எஸ். என்னும் செல்போன் குறுந்தகவல்கள் ஆகியவற்றில் இந்திமொழியை பயன்படுத்தவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.
* வங்கிகள் பல்வேறு வகையிலான கணினிவழி சேவைகளை வழங்குகின்றன. ஆனால் அவற்றில் விரும்பிய அளவுக்கு இந்தி பயன்பாடு இல்லை. ஏ.டி.எம். எந்திரங்களில் பரிவர்த்தனை சீட்டுகளை இந்தியில் பெறுவதற்கு வசதி இல்லை.
* ஆங்கிலத்துடன், இந்தியிலும் ஏ.டி.எம். எந்திரங்கள் பரிவர்த்தனை சீட்டுகளை அச்சிட்டு தர வேண்டும் என்பது உள்துறை அமைச்சகத்தின் விருப்பம். அதே நேரத்தில் இணைய வழி சேவைகளில், இந்தி மொழி தெரிவை வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும்.
* முக்கிய வங்கி அமைப்புகளில், இந்தி மொழியை பயன்படுத்தும் தரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்த பணி இயல்பாக இந்தியில் நடைபெற வேண்டும்.
* தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மக்களுடன் நல்ல தொடர்பை கொண்டுள்ளன. இந்த பிரச்சினைகள் தொடர்பாக நிதிப்பணிகள் துறைக்கு பல கடிதங்கள் இதற்கு முன்பாக எழுதப்பட்டுள்ளன. வங்கிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. வங்கிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், மேற்கண்ட பிரச்சினைகளில் பெரும்பான்மையான வங்கிகள் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment